உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லறை தினம் அனுசரிப்பு

கல்லறை தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி, நவ. 3-கல்லறை தினமான நேற்று, கிருஷ்ணகிரியில் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை காலை முதல் துாய்மைப்படுத்தி, மலர்களால் கிறிஸ்தவர்கள் அலங்கரித்தனர். பின்னர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையிலுள்ள கல்லறையில், துாய பாத்திமா ஆலய பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் பாதிரியார்கள், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, எலத்தகிரி, கந்திகுப்பம், புஷ்பகிரி, பர்கூர், சூளகிரி, ஓசூர், மதகொண்டப்பள்ளி, ராயக்கோட்டை, சுபேதார்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதி கல்லறை தோட்டங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி