உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சூளகிரி வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

சூளகிரி வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

சூளகிரி வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் கிருஷ்ணகிரி, செப். 29-சூளகிரி வட்டார வேளா ண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில், வட்டார தொழில் நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனரும், வட்டார தொழில் நுட்ப குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஜான் லுார்து சேவியர் தலைமை வகித்தார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர், வெங்கடேசன் வரவேற்றார். இதில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பயிற்சிகள் நடத்துவது மற்றும் பட்டறிவு பயணங்களுக்கு விவசாயிகளை அழைத்து செல்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது. வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், சொட்டு நீர்பாசனத்தின் பயன்கள் மற்றும் பயிர் காப்பீடு திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை அலுவலர் ராஜேஷ், தோட்டக்கலைத்துறை அலுவலர் திருமுருகன், பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் கல்யாண சுந்தரம், வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முஹம்மது ரபி, பழனிசாமி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ