உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10ம் வகுப்பு மாணவர் மர்ம சாவு

10ம் வகுப்பு மாணவர் மர்ம சாவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த செக்கில்நத்தத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் ஹரீஷ், 14. இவர், கப்-பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி சென்-றவர், மாலை வீடு திரும்பவில்லை.நேற்று காலை வீட்டிலிருந்து சிறிது துாரத்திலுள்ள மாந்தோப்பி-லுள்ள மரத்தில் சேலையில் துாக்கில் தொங்கிய நிலையில் ஹரிஷ் சடலமாக கிடந்தார். பர்கூர் போலீசார் சடலத்தை மீட்-டனர். வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், சிறிது துாரம் ஓடியது, ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.போலீசார் கூறுகையில், 'சிறுவன் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான், மாணவன் எப்படி இறந்தான் என தெரிய வரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி