உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் டெங்கு பாதிப்பு 58 சதவீதம் அதிகரிப்பு

கி.கிரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் டெங்கு பாதிப்பு 58 சதவீதம் அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சளி, காய்ச்சலால் மக்கள் அவதியுற்று வருவதோடு, டெங்கு பாதிப்பும், 58 சதவீதம் அதிகரித்துள்ளது.பருவநிலை மாற்றத்தால் 'ஏடிஸ்- ஏஜிப்டி' வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ-கத்தில் நடப்பாண்டில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும், 200க்கும் மேற்-பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் குளிருடன் அவ்வப்போது பெய்து வரும் மழையால் சளி, காய்ச்சலுடன் டெங்கு பாதிப்பும் அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ-மழை சராசரி, 291 மி.மீ., அளவில் உள்ள நிலையில், கடந்த டிச., 3 வரை, 303.83 மி.மீ., அளவில் மழை பெய்துள்ளது. இது 4 சதவீதம் அதிகமாகும். தற்போது வரை மாவட்டத்தில் பல இடங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரில் டெங்கு கொசுப்புழுக்கள் அதிகரித்துள்ளன. மாவட்டத்தில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால், 288 பேர் பாதிக்கப்பட்டனர். அதாவது டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்-படுவோரின் மாத சராசரி, 24 ஆக இருந்தது. ஆனால் தற்போது தேங்கியுள்ள மழைநீர், டெங்கு கொசுப்புழுக்கள் அதிகரிப்பால் கடந்த, 3 மாதங்களில் மட்டும், 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்தாண்டை விட, 58.53 சதவீதம் அதிகம் ஆகும். இது தவிர சளி, காய்ச்சலால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக தளி, ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் டெங்குவால் பலர் பாதிக்-கப்பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு, 6 விதமான பரிசோதனைகள் மேற்-கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலில் பாதிக்-கப்பட்டோருக்கு தேவையான உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி, ஒசல்டா-மிவிர், பாராசிட்டமல் மாத்திரைகள் தேவையான அளவு கையி-ருப்பும் உள்ளது. ''மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்காய் மட்டைகள், டயர்கள் கொட்டாங்குச்சிகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கியுள்-ளதா எனவும், சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த அக்., மாதத்தில், மாவட்டத்தில் பாதிப்பு, 70 ஆக இருந்த நிலையில் டிச., மாதத்தில் இதுவரை, 20 பேர் மட்டுமே பாதிக்-கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை