மீனவ சமுதாய இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
மீனவ சமுதாய இளைஞர்களுக்குபோட்டி தேர்வுகளுக்கு பயிற்சிதர்மபுரி, நவ. 1-மீனவ சமுதாயத்தை சேர்ந்த, பட்டதாரி இளைஞர்களுக்கு, போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பாக, ஆண்டுதோறும், 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள, பயிற்சியளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகள் இதில், சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள மீனவ பட்டதாரி இளைஞர்கள், www.fisheries.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகங்களில், வேலை நாட்களில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும், நவ., 5 மாலை, 5:00 மணிக்குள் உதவி இயக்குனர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், 1/165 ஏ ராமசாமி கவுண்டர் தெரு, கலெக்ட்ரேட் போஸ்ட், ஒட்டப்பட்டி, தர்மபுரி - 636 705 என்ற முகவரிக்கு, வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.