சேவல் சண்டை சூதாட்டம் 4 கார் ரூ.1.99 லட்சம் பறிமுதல்
கெலமங்கலம்: கெலமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., சிற்றரசு மற்றும் போலீசார், பேவநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள சிவன் கோவில் மலை அடிவாரத்தில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்த கும்பல், சேவல், பணம் மற்றும் வாகனங்களை விட்டு விட்டு தப்பியோ-டினர். அங்கிருந்த, 4 கார், 6 பைக், 4 சேவல் மற்றும் 1.99 லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அதேபோல், கெலமங்கலம் கிளாசிக் லாட்ஜ் பின்புறம் பணம் வைத்து சூதாட்-டத்தில் ஈடுபட்டதாக, கெலமங்கலத்தை சேர்ந்த ஜான்பாஷா, 53, ராஜப்பா, 48, முனிராஜ், 33, இம்ரான், 35, மஞ்சு, 38, சரவணன், 45, ஆகிய, 6 பேரை, போலீசார் கைது செய்து, ஜாமினில் விடு-வித்தனர்.