உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பணிகளை கலெக்டர் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சி கிட்டம்பட்டி காலனியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று, விண்ணப்பதாரர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து கலெக்டர் கூறுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தன்னார்வலர்கள் மூலம், அரசுத்துறைகளின் சேவைகள், திட்டங்கள் குறித்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று, தகவல் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.இப்பணி தொடர்ந்து, 3 மாதங்களுக்கு நடக்கும். இப்பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், முகாம் நடக்கும் நாளன்று சென்று உரிய ஆவணங்களுடன் தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம்,'' என்றார். பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிவப்பிரகாசம், துணை பி.டி.ஓ., ராஜூ, வி.ஏ.ஓ., கிருஷ்ணன் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !