உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைக்குகலெக்டர் பாராட்டு சான்றிதழ்ஓசூர், அக். 19-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 'பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்' மற்றும் 'முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு' திட்டத்தில், தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கி செயல்பட்டதற்காக, மாவட்ட கலெக்டர் சரயு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜா முத்தையா பெற்றுக் கொண்டார். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெரும்பாலான மக்கள் பயன்படக்கூடிய வகையில், சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கு, மருத்துவ கல்லுாரி அறங்காவலர் லாசியா தம்பிதுரை, வாழ்த்து மற்றும் பாராட்டை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை