உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த காரக்குப்பத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார்.மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:கர்ப்பிணிகள் பலர், இரும்புச்சத்து குறைபாடால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் கீரைகள், பேரீச்சை உள்ளிட்டவற்றை சாப்பிட்டால், பின்னால், சத்துக்குறைவுக்கான ஊசிகள் போட தேவையில்லை. இந்தியாவிலேயே பிரசவ இறப்புகள் மிக குறைவாக உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. பிரசவத்திற்கு பிறகு உள்ள சிக்கலை குறைக்கும் வகையிலான, மருந்தின் விலை, 25 ரூபாய் மட்டுமே. சிலர் 'யூ டியூப்' பார்த்து பிரசவம் பார்க்கலாம் என யோசிப்பது போன்ற விபரீத எண்ணங்கள் தோன்ற கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், பர்கூர் தாசில்தார் பொன்னாலா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை