உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டிஅரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டிஅரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டிஅரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் வள்ளுவர்புரத்திலுள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 5ல் நடந்தது. தினமும் பூஜைகள் நடந்து வந்த நிலையில், வரும், 21ல், 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. இதையொட்டி, வள்ளுவர்புரம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, விளையாட்டு, பேச்சு, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடக்கிறது. நேற்று, ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, கோணிப்பை ஓட்டம், பலுான் ஊதும் போட்டி, பேப்பர் கப்பை வைத்து கோபுரம் அமைக்கும் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு மண்டல பூஜை நிறைவு விழாவில், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி, ஆசிரியர்கள் ரோஸ்லின் சகாயமேரி, சுரேஷ், ஜெயபாரத், பவுலின் ஷர்மிளா, சென்னையன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி