உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவிக்கு பாராட்டு

பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஓசூர், மே 14கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சித்தனப்பள்ளியில் உள்ள டிரண்ட் சிட்டி சஷ்டி அவென்யூ லே அவுட்டில் வசிக்கும் அகிலன் - சுமித்தா தம்பதி. இவர்களது பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மகள் ரியாஸ்ரீ, 17, பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, 576 மதிப்பெண்கள் பெற்றார். இதையறிந்த, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாணவியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து, பொன்னாடை அணிவித்து பாராட்டினார். அனைவர் முன்னிலையிலும் மாணவி பாடல் ஒன்றை பாடி காட்டினார். பள்ளி தலைமையாசிரியர் தர்மசம்வர்தினி, மாணவியின் பெற்றோர் மற்றும் ஓசூர், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் வீரபத்திரப்பா உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ