உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வந்து விபத்தில் சிக்கியோருக்கு ஆறுதல்

இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வந்து விபத்தில் சிக்கியோருக்கு ஆறுதல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த, இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு மினி லாரியில் வந்து விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தம்பிதுரை எம்.பி., சந்தித்து ஆறுதல் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நேற்று முன்தினம், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்ற பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க போச்சம்பள்ளியை அரு‍கே கீழ்மயிலம்பட்டியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர் மினிலாரியில் வந்தனர்.அப்போது அத்திகானுார் அருகே, எதிரில் வந்த பிக்கப் வேன் மோதியதில் மினிலாரி கவிழ்ந்தது. இதில், 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை, அ.தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு, தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்வ தாகவும் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ