25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு கடன் சங்கம் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணிபுரியும் சங்க பணியாளர்கள் நேற்று, 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர்கள் மூர்த்தி, சிவா, மாவட்ட இணைசெயலாளர் தமிழ்செல்வி, போராட்டக்குழு தலைவர் விக்ரமன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். 2021ம் ஆண்டுக்கு பின் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 2021க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கருணை ஓய்வூதியம், 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளை கடக்கும் நிலையில், ஓய்வுபெற்ற பணியார்களின் நலன் கருதி, 5,000 ரூபாய் அளவில் இதை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.