மேலும் செய்திகள்
வடக்கிபாளையத்தில் கொப்பரை ஏலம் துவக்கம்
03-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ--நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில், 3,926 கிலோ கொப்பரை தேங்காய்கள், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம், 185.99- ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 86.99 ரூபாய்-க்கும், சராசரியாக கிலோ ஒன்று, 180.09 ரூபாய்-க்கு விற்பனையானது. அதன்படி, 5.73 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது. இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், ''கொப்பரை, பருத்தி மட்டுமின்றி நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் நடக்க உள்ளதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்'' என்றார்.'****************************
03-Apr-2025