ரூ.9.24 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடந்தது. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ, 257 ரூபாய், குறைந்தபட்சமாக, 160.19 ரூபாய், சராசரியாக, 244 ரூபாய் என மொத்தம், 4,032 கிலோ கொப்பரை, 9.24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நடப்பு பருவத்தில் நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் (இ-நாம்) நடக்க உள்ளதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் நெல்லை நல்ல விலைக்கு வர்த்தகம் செய்யலாம் என, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறினார்.