உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானை கூட்டத்தால் பயிர்கள் நாசம்

யானை கூட்டத்தால் பயிர்கள் நாசம்

தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனத்திலிருந்து வெளியேறிய யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து, தக்காளி மற்றும் பலாப்பழங்களை சேதப்படுத்தின.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள யானைகள், இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி, வனத்தையொட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு வனத்திலிருந்து வெளியேறிய, 4 யானைகள், தாரவேந்திரம் பஞ்., உட்பட்ட சிவனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அப்பகுதியில் முரளி, 30, என்பவரது ஒன்னேகால் ஏக்கர் விவசாய நிலத்திற்குள் புகுந்து, தக்காளி செடிகளை சேதப்படுத்தின. அங்கிருந்து வெளியேறி, ஒக்கனதொட்டி கிராமத்திற்கு சென்ற யானைகள், தம்மையா, 65, என்பவரது பலா மரத்தில் இருந்த பழங்களை பறித்து சாப்பிட்டன.பின்னர், கே.ஆர்., தொட்டி, பி.ஆர்., தொட்டி, நேரலட்டி, பீமசந்திரம் பகுதிகளில் சுற்றித்திரிந்த யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி விட்டு, மீண்டும் நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்றன. யானைகளால் தொடர்ந்து, விவசாய பயிர்கள் சேதமாகி வருவதால் அவற்றை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அத்துடன், சேதமான பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி