உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் கிரஷர், குவாரி ஸ்டிரைக் வேலையிழந்த தொழிலாளர்களும் போராட்டம்

கிருஷ்ணகிரியில் கிரஷர், குவாரி ஸ்டிரைக் வேலையிழந்த தொழிலாளர்களும் போராட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிரஷர், குவாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், வேலை இழந்துள்ள தொழிலாளர்கள், கிரஷர், குவாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 103 குவாரிகள் மற்றும் 72க்கும் மேற்பட்ட கிரஷர்கள் உள்ளன. குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைச்சீட்டு இதுவரை ஒரு கன மீட்டர், 1.75 டன் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதை, தற்போது ஒரு கன மீட்டர், 2.75 டன் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், குவாரிகள் இருக்கும் நிலங்களுக்கான வரி எனக்கூறி, ஒரு டன்னுக்கு 90 ரூபாய் செலுத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை திரும்பப் பெறவும், ஏற்கனவே கொடுத்த 24 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் ஆகியவை சார்பில், 100 சதவீத குவாரிகள், கிரஷர்களை மூடி, கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.இதனால், குவாரி மற்றும் கிரஷர்களில் பணியாற்றும் 15,000 தொழிலாளர்கள் வேலை இழந்தும், 2,000க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடு ஏற்றப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலையிழந்த தமிழக மற்றும் வடமாநில தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் இணைந்து, சூளகிரி அடுத்த காமன்தொட்டி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கினர்.ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் துணைத்தலைவர் மது தலைமையில், 3,000க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், சூளகிரி தாசில்தார் வளர்மதி பேச்சு நடத்தினார். ஆனால், கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை, போராட்டம் தொடரும் என, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை