உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அஞ்சலகங்களில் க்யூஆர் கோடு மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதி

அஞ்சலகங்களில் க்யூஆர் கோடு மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதி

கிருஷ்ணகிரி: அஞ்சலகங்களில், 'க்யூஆர்' கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்சலகங்களில் பார்சல்கள், கடிதங்கள் பதிவு செய்யும் போது 'க்யூஆர்' குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் துணை, கிளை அஞ்சலகங்கள் மூலம் வினியோகிக்கப்படும் 'கேஸ் ஆன் டெலிவரி' பார்சல்களுக்கு பெறுனர்கள் பணத்தை நேரடியாக வழங்காமல், டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தலாம்.இதன் மூலம், பணம் கையாளுதல் குறையும். பாதுகாப்பு அதிகரிக்கும். விரைவான மற்றும் எளிதான பரிவர்த்தனை கிடைக்கும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இத்தகைய டிஜிட்டல் கட்டண வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை