உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆபத்தான வளைவு சாலை; விரிவுபடுத்த வேண்டுகோள்

ஆபத்தான வளைவு சாலை; விரிவுபடுத்த வேண்டுகோள்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை, குட்டைமுக்கு பகுதியில் அடுத்தடுத்து கொண்டை ஊசிபோல், மூன்று வளைவுகள் உள்ளன. இந்த வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள், அருகே வரும்போது தான் தெரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும், அப்பகுதிமிகவும் குறுகியதாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கவனக்குறைவாக சென்றால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், வளைவு பகுதியை விரிவுபடுத்தி, எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை