உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற அக்., 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற அக்., 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு

கிருஷ்ணகிரி:''தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் பெற, வரும் அக்., 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் பேசினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்குவது, பாதுகாப்பான பட்டாசு விற்பனை, பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். எஸ்.பி., தங்கதுரை முன்னிலை வகித்தார். இதில், கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: வரும் அக்., 20ல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய உரிமம் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அவகாசம் வரும் அக்., 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அனைத்து இ-சேவை மையங்களிலும், https://www.tnesevai. tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிய ஆவணங்களுடன், டி.ஆர்.ஓ.,வுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார், தீயணைப்பு அலுவலர் மற்றும் உரிமம் வழங்கிய அலுவலருக்கும் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஓசூர் சப் -கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், துணை ஆட்சியர் (பயிற்சி) க்ருதி காம்னா, பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை