மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
30-Aug-2024
தர்மபுரி: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியு-றுத்தி, சி.ஐ.டி.யு., தர்மபுரி மாவட்ட கே.எம்.ஹரிபட் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட செயலாளர் ஜீவா, அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுச்செயலாளர் சண்முகம், கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 2019 புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது. ஆன்-லைன் அபராத முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். டில்லி, மஹாராஷ்டிரா அரசுகளை போல், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து ஆட்-டோக்களுக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து கொடுத்து, தொழிலை முறைப்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். புதிய ஆட்டோ வாங்குபவர்க-ளுக்கு, 10,000 ரூபாய் மானியம் என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்-குறுதியை நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
30-Aug-2024