உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.21 கோடியில் வளர்ச்சி பணி

ரூ.1.21 கோடியில் வளர்ச்சி பணி

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், அனுமந்தபுரம் மற்றும் ரத்தினகிரி பஞ்., உட்பட்ட உனிசெட்டி, அய்யூர், திம்மனுார், கோவகுட்டை, கூச்சுவாடி, நெமிலேரி, திப்பனுார், ஒசஹள்ளி, அனுமந்தபுரம், குடியூர், கோவிந்தப்பள்ளி, தட்டசந்திரம், சாத்தனக்கல் ஆகிய கிராமங்களில், தளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, கெலமங்கலம் ஒன்றிய பொது நிதி மற்றும் முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை சார்பில், 1.21 கோடி ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய், சிமென்ட் சாலை, தார்ச்சாலை ஆகியவை அமைக்கும் பணிகளை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். கெலமங்கலம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, இ.கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமையா, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை