உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.4.34 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

ரூ.4.34 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஜவளகிரி சாலையில், மர-காரதொட்டியிலிருந்து, கர்நாடகா மாநில எல்லை வரை, முதல்-வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 2.22 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணி மற்றும் மாருப்பள்ளி முதல் சொல்லேபுரம் வரை, 2.12 கோடி ரூபாய் மதிப்பில், இரு-வழிச்சாலையாக விரிவாக்கம் செய்தல் மற்றும் பாலம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூஜை செய்து துவக்கி வைத்தார்.பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, மக்கள் பயன்-பாட்டிற்கு வழங்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை