ஓசூரில் தன்வந்திரி கோவில் கும்பாபிஷேகம்
ஓசூர்: ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்ட, தன்வந்திரி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 14ல் துவங்கியது. மகா கணபதி ஹோமம், தன்வந்திரி பூஜை, வாஸ்து கலச பூஜை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கும்பாபிஷேக விழா துவங்கியது. காலை மகா கணபதி ஹோமம், கலசாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 8:35 மணிக்கு மேல், கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.தன்வந்திரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதியமான் கல்வி நிறுவனங்கள் தலைவர் தம்பிதுரை எம்.பி., அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் லாசியா தம்பிதுரை, டாக்டர் நம்ரதா தம்பிதுரை, எம்.பி., கோபிநாத், முன்னாள் அமைச்சர்கள் பாலகிருஷ்ணாரெட்டி, வீரமணி, வேளாங்கண்ணி பள்ளி குழும தாளாளர் கூத்தரசன், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி மேலாளர் நாராயணன், எஸ்.டி.ஆர்.ஆர்., விவசாயிகள் சங்க தலைவர் முனிவெங்கடப்பா, துணைத்தலைவர் அமரேஷ், செயலாளர் அருண்ராஜன், பொருளாளர் முரளி, இணை செயலாளர் சீனிவாசன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.