மேலும் செய்திகள்
இலவச சட்ட உதவி முகாம்
29-Sep-2024
இலவச சட்ட உதவி எண் விழிப்புணர்வு மக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்கிருஷ்ணகிரி, அக். 18-கிருஷ்ணகிரியில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி எண் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவி எண் குறித்த விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள், பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமை வகித்து, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவி எண், '15100'க்கான பிளக்ஸ் போர்டை திறந்து வைத்து பேசியதாவது:இன்றைய காலகட்டத்தில் அனைவரும், சட்ட, திட்டங்களையும் அதன் நுணுக்கங்களையும் நன்கு அறிய வேண்டும். எங்கு, ஒரு சட்ட விரோத செயல் நடந்தாலும் அது குறித்து புகாரளிப்பதற்கும், அது குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும் இலவச சட்ட உதவி எண் உள்ளது. இதன் மூலம் அனைவரும் தங்கள் சந்தேகங்கள், புகார்கள் தெரிவிக்கும் முறைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். குற்றங்கள் குறித்தும், அதை ஆரம்ப நிலையில் தடுப்பதற்கும் இது வழிவகுக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட நீதிபதி தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வாக் அகமது, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், கூடுதல் சார்பு நீதிபதி ஜெனிபர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூர்த்தி, நீதித்துறை நடுவர் இருதயமேரி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
29-Sep-2024