கிருஷ்ணகிரியில் மாவட்ட கலைத்திருவிழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆக., 28ல் குறுவள அளவிலும், கடந்த அக்., 28ல் வட்டார அளவிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.இதில், முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு, நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில், 2 நாள் கலைத்திருவிழா துவங்கியது. தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். சி.இ.ஓ., (பொ) முனிராஜ் தலைமை வகித்தார். டி.இ.ஓ., தாம்சன், உதவி திட்ட அலுவலர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 6 முதல், 8ம் வகுப்பு மாணவ, மாணவியர் மற்றும் ஒன்று முதல், 12ம் வகுப்பு அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் போட்டிகள் நடந்தன.இவர்களுக்கு, பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்-லிசைப் பாடல்கள், தேச பக்தி பாடல்கள், களிமண் பொம்-மைகள், மாறுவேட போட்டிகள், நாட்டுப்பற நடனம், பரத நாட்-டியம், நாடகம், மழலையர் பாடல்கள் ஆகிய போட்டிகள் நடந்-தன.போட்டிகளுக்கு, 40 பேர் நடுவர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.