உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்ட பதிவுப்பெற்ற அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மாவட்ட பதிவுப்பெற்ற அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சரயு தலைமை வகித்து, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் நல வாரியம் மூலம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பிக்க தவறிய உறுப்பினர்களை மீண்டும் சேர்க்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் பெறுதவற்கான வழிகாட்டுதல் மற்றும் ஊத்தங்கரை பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி இடம் தேர்வு செய்தல் குறித்தும் கேட்டறிந்தார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், தாசில்தார்கள், டவுன் பஞ்., செயலர்கள், பி.டி.ஓ.,க்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி