மின்வாரிய ஊழியர்களை தாக்கிய விவகாரம்: தி.மு.க., நிர்வாகி கைது
பவானிசாகர்: பவானிசாகர் உதவி மின் பொறியாளர் அலுவலக ஊழியர் ஐந்து பேர், நால்ரோடு பெட்ரோல் பங்க் அருகில் மின்மாற்றி பராம-ரிப்பு பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த பங்க் உரிமையாளர் ஆறுச்சாமி, யாரை கேட்டு இங்கு வேலை செய்கிறீர்கள்? என அவர்களிடம் கேட்டு வாக்கு-வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆறுச்சாமிக்கு ஆதரவாக வந்த அவரது உதவியாளர் கவியரசு, மின்வாரிய ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்கி-யுள்ளார். இதில் ஊழியர்கள் ராஜேந்திரன், மயில்சாமிக்கு காயம் ஏற்பட்டது. தலையில் கல்லால் தாக்கப்பட்ட ராஜேந்திரன், கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். இதுகுறித்த புகாரின்படி பவானிசாகர் போலீசார், வழக்-குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று காலை பவானிசாகர் உதவி மின் பொறி-யாளர் அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தை பூட்டி போராட்-டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களை தாக்கிய நபர் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஆறுச்சாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய தி.மு.க., அவை தலைவராக உள்ளார். மின்வாரிய ஊழி-யர்களை தாக்கிய கவியரசு மீது பவானிசாகர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், ஏழு திருட்டு வழக்குகள் உள்ளன. தலைமறைவான அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஆறுச்சாமியை போலீஸ் ஸ்டேஷனுக்கு, போலீசார் நேற்று மாலை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் இரவில் கைது செய்தனர்.