உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில், தளி, வேப்ப-னஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஓசூரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தல் குறித்தும், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ சிலையை அமைப்பது குறித்தும் பேசினார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தலைமை செயற்குழு உறுப்-பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ