கிருஷ்ணகிரியில் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை, 11:00 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மஹால் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமையில் நடக்கிறது. இதில் உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி பேசுகிறார். இதில் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை ஆக., 20 முதல் அக்., 31 வரை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுடன் இணைந்து உதவ வேண்டும். குழப்பங்கள், தவறுகள் இருப்பின் அலுவலர்கள், தி.மு.க., மாவட்ட தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்-.