உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பிரசார கூட்டம்

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பிரசார கூட்டம்

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., மத்துார் ஒன்றிய கழக சார்பில், 'ஓரணியில் தமிழகம்' என்ற, உறுப்பினர்களை சேர்க்கும் பிரசார கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., அரசின் செயல் திட்டங்கள் மற்றும் சாதனைகள் உள்ளிட்டவை எடுத்து கூறப்பட்டது.இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் மாலதி நாராயணசாமி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் வசந்தரசு, நரசிம்மன் மற்றும் தி.மு.க.,வை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை