உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீர்நிலைகள் அருகே குழந்தைகளை அனுப்ப வேண்டாம்; கலெக்டர் அறிவுரை

நீர்நிலைகள் அருகே குழந்தைகளை அனுப்ப வேண்டாம்; கலெக்டர் அறிவுரை

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பல ஏரிகள் நிரம்பி வருகின்றன. அதில் மாணவ, மாணவியர் மற்றும் சிறுவர்களை விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என, கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 87 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில், 1,143 ஏரிகளும் உள்ளன. இதை தவிர, 4 பெரிய அணைகளும், பாரூர் பெரிய ஏரியும் மாவட்டத்தில் உள்ளன.இதில் இரு, 2 அணைகள், பாரூர் பெரிய ஏரி மற்றும், 41 ஏரிகள், தற்போது பெய்த மழையால் முழுவதுமாக நிரம்பியும், 379 ஏரிகள், 50 சதவீதத்திற்கும் மேல் நீர் நிறைந்தும் உள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவ, மாணவியர் விளையாடவும், நீச்சல் பழகவும், குளிக்கவும் மேற்கண்ட நீர்நிலைகளுக்கு தனியே செல்வதால் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இது போன்ற நீர் நிலைகள் அருகே பெற்றோர் தங்களது குழந்தைகளை நீர்நிலைக்கு அருகில் விளையாட அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை