போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் டவுன் பஞ்.,ல், உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.கிருஷ்ணகிரி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி கன்கார்டியா அரசு உதவி பெறும பள்-ளியில் இருந்து துவங்கி, பர்கூர் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்-தது. பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கன்கார்டியா பள்ளிகளை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.