உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது.திருத்தல பங்குதந்தை அருள்ராஜ், திருப்பலி பூஜைகளை நிறை-வேற்றி வைத்தார். முன்னதாக, அடக்கம் செய்யப்பட்ட கல்ல-றையில் இருந்து, மூன்றாவது நாள் இயேசு உயிர்தெழும் நிகழ்வு, ஒளி வெள்ளத்தில் சிறப்பாக நடந்தது.இதை தொடர்ந்து, இயேசுவை வரவேற்கும் வகையில், அனைவர் கைகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு திருப்பலியில், கிருஷ்ணகிரி உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ