உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வனச் சரச்சரகத்திற்கு உட்பட்ட தடிக்கல், சாத்தனக்கல் பகுதிகளில், யானைகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் மின்வேலி அமைக்காமல், முறையற்ற வகையில் வனத்துறை மூலம் மின்வேலி அமைக்கப்படுகிறது.இதை கண்டித்து, இ.கம்யூ., கட்சி சார்பில், தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை பகுதி செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா, மாநில குழு உறுப்பினர்கள் சுந்தரவள்ளி, சின்னசாமி, பழனி, சாம்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில், மின்வேலி அமைக்காததை கண்டித்து, கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை