உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானை தாக்கி முதியவர் காயம்

யானை தாக்கி முதியவர் காயம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், மேல்பூங்குருத்தி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன், 70. இவர், வளர்த்து வரும் ஆடுகளை, நேற்று காலை அருகில் உள்ள விளை நிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அவரை தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் யானையை விரட்டி, காயம் அடைந்த முனியப்பனை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். யானை தாக்கி, இடுப்பு எலும்பு உடைந்த நிலையில், முனியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். யானையின் நடமாட்டத்தை கண்காணித்தும், வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை