உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆட்டோ மோதி எலக்ட்ரீஷியன் பலி

ஆட்டோ மோதி எலக்ட்ரீஷியன் பலி

கிருஷ்ணகிரி, கல்லாவி அடுத்த சிங்கிரிப்பட்டியை சேர்ந்தவர் செல்வா, 25, விவசாயி. இவர், நேற்று முன்தினம் தன் நண்பரான எலக்ட்ரீஷியன் ராஜேஷ், 35, என்பவருடன் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். பைக்கை செல்வா ஓட்டினார். மதியம், 2:00 மணியளவில் கல்லாவி அருகே எதிரே வந்த ஆட்டோ மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த ராஜேஷ் பலியானார். ஆட்டோ டிரைவரான ஊத்தங்கரையை சேர்ந்த மாதேஸ்வரன், 50 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரன் மீது வழக்குப்பதிந்து, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை