மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரியில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்-வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நேற்று கவன ஈர்ப்பு உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. பொறியாளர் கழகம் ஜெயபிரகாஷ், பொறியாளர் சங்கம் சரவணன், ஐக்கிய தொழி-லாளர் பொறியாளர் சங்கம் கிரிதரன், அண்ணா தொழிற்சங்கம் மோகன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். உள்ளிருப்பு போராட்டத்தில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்-தையில் அலுவலர் அல்லாத மின்வாரிய பணியாளர்களுக்கு மட்டும், ஊதிய உயர்வு என்ற மின்வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. மின்வாரியத்தில் காலியாக உள்ள, 55,000 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்-களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, உரிய நேரத்தில் ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும். பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியான, 5 லட்சம் ரூபாயை, மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்-டன கோஷங்களை எழுப்பினர்.