உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்டியுடன் சுற்றித்திரியும் யானை ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி

குட்டியுடன் சுற்றித்திரியும் யானை ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனுார் வனப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அதில், தனியாக பிரிந்த ஒற்றை யானை, தன் குட்டியுடன் அப்பகுதிகளில் சுற்றித்திரிகிறது. அஞ்செட்டி தொட்டமஞ்சு, நாட்றாம்பாளையம், உரிகம், கோட்டையூர், தக்கட்டி, மாடக்கல் மற்றும் மஞ்சுகொண்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டி சாலையோரம் சுற்றுகிறது. நேற்று தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில், குட்டியுடன் சுற்றித்திரிந்த யானையை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். சிலர், ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று, 'செல்பி' எடுத்து சென்றனர். வனத்துறையினர், குட்டியுடன் சுற்றும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை