உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகளால் குழாய்கள் சேதம்

யானைகளால் குழாய்கள் சேதம்

தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே நொகனுார் வனப்பகுதியில், 5 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வனத்திலிருந்து வெளியேறிய, 5 யானைகள், பார்த்திபன் என்பவரது ரோஜா தோட்டத்திற்குள் புகுந்து, வாழை, தென்னை மரங்களை முறித்து சாப்பிட்டன.பின்னர் சொட்டு நீர் பாசன குழாய்களை காலால் மிதித்து நாசம் செய்தன. அடிக்கடி சொட்டு நீர் பாசன குழாய்களை யானைகள் சேதப்படுத்துவதால், அதிக இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த நவ., மாதத்தில் பயிர் சேதத்திற்கு கொடுத்த மனுக்களுக்கே, இதுவரை வனத்துறை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ