மேலும் செய்திகள்
உடல்நலக்குறைவால் இறந்த சிறுவனின் கண்கள் தானம்
26-Aug-2025
சூளகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தளி சாலையில், பட்டு வளர்ச்சித்துறை குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபிநாத், 53. தின்னுார் பட்டு வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும், பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோவிந்தராமன், 60, என்பவரும், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம், 2:15 மணிக்கு, டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டரில் சென்றனர். சூளகிரி அருகே அட்டகுறுக்கி பகுதியில் சென்ற போது, சாலையில் நின்ற லாரியின் பின்னால் ஸ்கூட்டர் மோதியது. இதில், ஸ்கூட்டரை ஓட்டி சென்ற கோபிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கோவிந்தராமன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Aug-2025