பாலக்கோட்டில் இ.பி.எஸ்.,க்கு உற்சாக வரவேற்பு
பாலக்கோடு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,க்கு பாலக்கோட்டில் மலர் துாவி, மாலை அணிவித்து, அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு செல்லும், அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்.,க்கு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை அருகே, கல்கூடஅள்ளியில், அ.தி.மு.க., சார்பில், தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்பு அளித்தனர். வழிநெடுங்கிலும் அவருக்கு கட்சி தொண்டர்கள் மலர் துாவி வரவேற்றனர். இதில், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.C