உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்ரீமாருதி மெட்ரிக் பள்ளியில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

ஸ்ரீமாருதி மெட்ரிக் பள்ளியில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அருகே, ஸ்ரீமாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.மாதேப்பள்ளியில் ஸ்ரீமாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. மலைகிராமங்கள் அதிகமுள்ள இப்பகுதியில் அமைந்துள்ள பள்ளியில், பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கத்துடன் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.இப்பள்ளியில். சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி கலையரங்கில், 10 அடி உயர விநாயகர் சிலை, வைக்கப்பட்டு, பூ, பழங்கள், அருகம்புல் மாலையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் நலமுடன் வாழ, துன்பங்கள் விலக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர், பள்ளி நிர்வாகிகள் இணைந்து, சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து, அனைவருக்கும் கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல் வழங்கப்பட்டது.பள்ளி நிறுவனர் ஜெயராமன், தாளாளர் தனுஜா, இயக்குனர்கள் நவீன்குமார், மேகமாலா, தலைமை ஆசிரியர் முகமது மசூத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !