உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஸ் ஸ்டாண்ட் அருகில்கிடந்த வெடி பொருட்கள்

பஸ் ஸ்டாண்ட் அருகில்கிடந்த வெடி பொருட்கள்

கிருஷ்ணகிரி, டிச. 17-கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகில், கடந்த, 14ல் வெடி பொருட்கள் சிதறி கிடப்பதாக, கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ., சுபனுக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்தபோது, 18 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அந்த இடத்தில் ஒரு ஸ்கூட்டரும், பைக்கும் மோதிக் கொண்டதும், அந்த நேரம் ஸ்கூட்டரில் இருந்து ஜெலட்டின் குச்சிகள் கீழே விழுந்ததும் தெரிய வந்தது. வி.ஏ.ஓ., சுபன் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை