மேலும் செய்திகள்
போலி டாக்டர் கைது: கிளினிக் சீல் வைப்பு
26-Oct-2024
போலி டாக்டர் கைது: கிளினிக்கிற்கு 'சீல்'ஓசூர், நவ. 16-ஓசூரில், போலி டாக்டர் கைது செய்யப்பட்டு, கிளினிக் 'சீல்' வைக்கப்பட்டது.ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மெகபூப்வலி, 54. ஓசூர் சுண்ணாம்பு ஜிபி பகுதியில் தங்கி, பழைய பெங்களூரு சாலையில், ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, ஓசூர் ஆயுர்வேதிக் மூலம் கிளினிக் என்ற பெயரில், சிகிச்சை அளித்து வந்தார்; மருத்துவம் படிக்காமல், இவர் சிகிச்சையளிப்பதாக, முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, ஓசூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி மற்றும் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர், நேற்று கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவருக்கு, மெகபூப்வலி மூலநோய்க்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.அவரிடம் விசாரித்த போது, 10ம் வகுப்பு படித்து விட்டு, 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மூல நோய் சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது. முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி கொடுத்த புகார்படி, மெகபூப்வலியை ஓசூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி தலைமையில் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சிகிச்சையளித்ததாக கடந்த, 2018ல், ஏற்கனவே மெகபூப்வலி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
26-Oct-2024