பாம்பு கடித்து விவசாயி பலி
ஓசூர், ஓசூர், ஜூஜூவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 31. விவசாயி; இவரது மனைவி அரசம்மாள், 25. கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 5ல் மாலை, 4:30 மணிக்கு, பால் கறக்க வந்தபோது, அவரை பாம்பு கடித்துள்ளது. மயங்கி கிடந்த அவரை மீட்ட உறவினர்கள், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு, கர்நாடகா மாநில எல்லையான, அத்திப்பள்ளியிலுள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.