மேலும் செய்திகள்
பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
23-May-2025
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சங்கிலிவாடியை சேர்ந்தவர் நந்தகுமார், 32, விவசாயி; இவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், சங்கலிவாடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே வந்தார். அப்போது, எதிரில் அதே பகுதியை சேர்ந்த அசோக்மித்திரன், 19, என்பவர் ஓட்டி வந்த ஹீரோ ஸ்பிளண்டர் பைக் ஸ்கூட்டி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த நந்தகுமார் அரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். அசோக்மித்திரன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
23-May-2025