மேலும் செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்தவர் சாவு
18-Apr-2026
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி புதுாரை சேர்ந்தவர் வேடியப்பன், 70, விவசாயி; இவர், நேற்று காலை, 11:30 மணிக்கு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துள்ளார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேடியப்பன் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
18-Apr-2026