உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10 ஆண்டுகளாக யானைகள் அட்டகாசம் விவசாயத்தை கைவிடும் நிலையில் விவசாயிகள்

10 ஆண்டுகளாக யானைகள் அட்டகாசம் விவசாயத்தை கைவிடும் நிலையில் விவசாயிகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை வனப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த, ஐந்து ஆண்டுகளாக முகாமிட்டு, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.யானைகளை விரட்ட வேண்டும் என, சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் முன், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த யானை-களை, 30 நாட்களுக்குள் வெளியேற்ற வேண்டும் என கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.ஆனால், 10 நாட்களை கடந்தும் வனத்துறையினர் எந்த நடவடிக்-கையும் எடுக்காததால், நேற்று முன்தினம் மீண்டும் இந்த யானைகள், மகாராஜடை, சிந்தகம்பள்ளி, ஏக்கல்நத்தம், நாரலப்-பள்ளி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், மா, தென்னை, ராகி உள்-ளிட்ட தோட்டங்களில் புகுந்து நாசம் செய்துள்ளது. யானைகள் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வருவதால், அப்-பகுதி விவசாயிகள், விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு வந்துள்ளனர்.எனவே கலெக்டரின் உத்தரவை, உடனே வனத்துறையினர் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ