உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கி.கிரி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தோத்தபுரி ரக மாங்காய்கள் டன் ஒன்றுக்கு தரத்தை பொறுத்து, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை கொள்முதல் செய்தனர். தற்போது டன்னுக்கு, 4,000 ரூபாய் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், அறுவடை கூலி கிடைப்பதில்லை என்பதால், விவசாயிகள் பலர் மாங்காய்களை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். மாநில அளவில் முத்தரப்பு கமிட்டி அமைத்து, விவசாயிகளை நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும். மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர், கொள்முதல் செய்யும் விலையுடன், அரசு மானியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை அனைத்தும் அரசுக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ